VIDEOS
வெளிநாட்டு வேலைக்கு செல்லும் கணவன்.. கண் கலங்கும் மனைவி… விமான நிலையத்தில் நடந்த பாசப் போராட்டம்…
கல்லானாலும் கணவன்… புல்லானாலும் புருஷன் என்பது பழமொழி. அதிலும் தமிழ்ப் பெண்களின் கணவர் பாசத்துக்கு அளவு கிடையாது. இங்கும் அப்படித்தான். தன்னைத் தொட்டு தாலிக் கட்டிய கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல அவரை குடும்பத்தோடு வழியனுப்ப வந்தார் மனைவி. ஆனால் அவரால் மற்றவர்கள் போல் சகஜமாக இருக்க முடியவில்லை. அவர் உடைந்து அழுகிறார். அதைப் பார்த்த கணவரும் அழுகிறார்.
விமான நிலையத்தில் அவர்கள் நின்ற பகுதியே சோகத்தில் மூழ்கியது. இதே போலத்தான் பல பெண்களும்… வெளிநாட்டு வேலைக்கு செல்லும் கணவரை வழியனுப்பி விட்டு அந்த நேரத்தில் கண்ணீர் மழையில் நனைந்து போவார்கள். விடியோவைப் பாருங்கள். உங்கள் வாழ்விலும் கூட இப்படி ஒரு சந்தர்ப்பம் இருந்திருக்கலாம்…