திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை நிவேதா தாமஸ்.. வருங்கால கணவருக்கு கண்டிஷன்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை நிவேதா தாமஸ்.. வருங்கால கணவருக்கு கண்டிஷன்..

Published

on

நின்னு கோரி, ஜென்டில்மேன் மற்றும் தர்பார் ஆகிய படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் நிவேதா தாமஸ். தமிழில் குருவி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் தமிழில் கமல் ஹாசனின் மகளாக பாபநாசம் படத்திலும், விஜய்க்கு தங்கையாக ஜில்லா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக தர்பார் படத்திலும் நடித்து பிரபலமாகியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை நிவேதா தாமஸ்.

மேலும் தற்போது தெலுங்கில் வி மற்றும் வக்கீல் சாப் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நிவேதா. தற்போது லாக்டவுன் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் 24 வயதாகும் இவர் முதன் முறையாக தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisement

எனது வாழ்வில் தற்போது சினிமா தான் மிக முக்கியம், எனக்கு திருமண ஆசை வரும் போது கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். மேலும் எனது வருங்கால கணவர் அதிகமாக பயணம் செய்பவராக இருக்க வேண்டும், முகத்திற்கு நேர் பேச வேண்டும், பின்னால் பேசுபவராக இருக்கக் கூடாது, மேலும் கணவர் என்ற பொறுப்பை உணர்ந்து என்னுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in