LATEST NEWS
நள்ளிரவில் பயங்கரம்.. வெள்ளத்தில் பாய்ந்து வந்த பைக்.. கால்வாய்க்குள் விழுந்த 46 வயது ஸோமேட்டோ ஊழியர்.. திக் திக் வீடியோ..!!
மாதாப்பூரில் உள்ள விட்டல் ராவ் நகர் அருகே அர்ஜுன் குமார் (46) என்ற ஸோமேட்டோ டெலிவரி ஊழியர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கால்வாயில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் பாய்ந்து வந்த வெள்ளத்தின் அதிவேகக் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த கால்வாய்க்குள் தவறி விழுந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கால்வாயில் தத்தளித்துக் கொண்டிருந்த அர்ஜுன் குமாரை அவர்கள் தீவிரமாகப் போராடி பத்திரமாக மீட்டனர். வெள்ளப் பெருக்கு காலங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
