மொட்டை மாடி போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்ட குட்டி ஜானு… வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மொட்டை மாடி போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்ட குட்டி ஜானு… வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!

Published

on

தமிழ் சினிமாவிற்கு 96 படத்தின் மூலம் அறிமுகமான கௌரி ஜி கிஷான் வரும் காட்சியில் எல்லாம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்து பாராட்டுகளை வாங்கியுள்ளார். தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் பல மொழி ரசிகர்களையும் ரசிக்க வைத்த 96 திரைப்படத்தில் திரிஷாவின் சிறிய வயது கதாபாத்திரத்தில் குட்டி ஜானுவாக மிக தத்ரூபமாக நடித்திருந்தார் கௌரி. தற்பொழுது விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார்.

கௌரி தற்போது மலையாளத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு தென்னிந்திய மொழி திரைப்படங்களில் படிப்படியாக நடித்து வரும் கௌரி பரியேறும் பெருமாள் என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகிவரும் கர்ணன் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு வருகிறார்.

Advertisement

இதற்கிடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து வரும் கௌரி தற்பொழுது பாவாடை சட்டையில் பாவ்லாவாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அதில் மேல்சட்டையை மேலே இறுக்கி கட்டியவாறு ஹை ஹீல்ஸ் அணிந்து சுதந்திர பறவை போல மகிழ்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் இந்த மொட்டை மாடி போட்டோஷூட் தற்பொழுது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in