LATEST NEWS
நடிகை அசினின் வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்! தற்போது எப்படி உள்ளார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அசின். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்தவர். ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் கஜினி, வரலாறு, சிவகாசி, வேல், போக்கிரி, தசாவதாரம் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் அசின். முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென , ஒரு ரசிக்கட்கள் கூட்டத்தைப் பிடித்திருந்தார்.
அசின் எட்டு மொழிகளில் பேசுவார். மேலும் தனது எல்லா திரைப் படங்கள் அனைத்திற்கும் தனது சொந்த குரலில் டப்பிங் செய்துக் கொள்வார். 2007 ஆம் ஆண்டில் ஆன்லைன் போர்ட்டல்களால் அசின் “கோலிவுட் ராணி” என்று அழைக்கபட்டார். மேலும் அசின் பல நிறுவனங்கள் பிராண்ட் தூதராக இருந்து வருகிறார். அவான், மிரிண்டா, கோல்கேட், தனிஷ்க், பிக் பஜார், பாராசூட் ஆகியவற்றின் விளம்பரங்களில் தோன்றினார்.
இதையடுத்து மைக்ரோமேக்ஸ் நிறுவனரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். ஆரின் என்ற பெண் குழந்தை உள்ளது. இதுவரை கவர்ச்சியில் நடிக்காமல் இருந்த அசின், விளம்பர படங்கள் சிலவற்றிற்காக அசின் நடத்தியுள்ள ஹாட் போட்டோஸ் காண்போரை கலங்கடிக்கிறது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
