CRIME
“என்னை பள்ளியின் ஹச்ம் பலமுறை.. ” பல மாடி கட்டிடத்தில் இருந்து 17 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு.. உலகையே உலுக்கிய தற்கொலைக் கடிதம்..!!
சீனாவின் புனிங் நகரில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வந்த 17 வயது பள்ளி மாணவி, பல மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவி குதிக்க முயல்வதை அறிந்த தீயணைப்புப் படையினர், கீழே பாதுகாப்பு ஏர் குஷன்களை அமைத்து அவரைப் பாதுகாக்க தீவிரமாக முயன்றனர். இருப்பினும், மிக உயரமான இடத்தில் இருந்து விழுந்ததன் கடுமையான தாக்கத்தின் காரணமாக அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த மாணவி எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்ட போது, உலகையே உலுக்கும் அதிர்ச்சி உண்மை வெளிவந்தது. அவர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த முதல் வருடத்திலிருந்தே, அந்தப் பள்ளியின் முதல்வர் மற்றும் பல ஆசிரியர்களால் திட்டமிட்ட முறையில் பாலியல் வன்கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கொடூரமான துயரத்தைத் தாங்க முடியாமல் மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், சீன சமூக ஊடகப் பக்கங்களில் இச்சம்பவம் தொடர்பான செய்திகளும் பதிவுகளும் காட்டுத்தீயாகப் பரவுவதைத் தடுக்க சீன அரசு கடுமையான இணைய தணிக்கையை அமல்படுத்தி வருகிறது.
