CRIME
டெல்லியில் திடீர் பரபரப்பு.. எமனாக வந்த லாரி… சாலையில் அலறியடித்து ஓடிய மக்கள்.. பைக் ஓட்டுநருக்கு கொடூர கதி.. பதறவைக்கும் விபத்தின் பின்னணி..!!
புது தில்லியின் துவாரகா செக்டார்-18 பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கட்டுமான லாரி ஒன்று, சாலையில் சென்றுகொண்டிருந்த மக்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த அதிர்ச்சிகரமான சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இக்கோர விபத்தில் சிக்கி நான்கு பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதிய இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் திடீரென பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தில்லி காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
