அய்யோ கடவுளே..! தாத்தாவின் நினைவாக ஓடிய பேத்தி… பாதியிலேயே நின்ற உயிர்..! மாரத்தான் போட்டியில் நடந்த சோகச் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கடவுளே..! தாத்தாவின் நினைவாக ஓடிய பேத்தி… பாதியிலேயே நின்ற உயிர்..! மாரத்தான் போட்டியில் நடந்த சோகச் சம்பவம்..!!

Published

on

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற சர்வதேச மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 24 வயது இளம்பெண், இலக்கை அடைய இன்னும் 2 மைல் தூரமே இருந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரைச் சேர்ந்த இளம்பெண் ரேச்சல் அபா. அண்மையில் காலமான தனது தாத்தாவின் நினைவாகவும், பார்க்கின்சன் நோய் ஆராய்ச்சிக்கு நிதி திரட்டுவதற்காகவும் முதன்முறையாக இந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார்.

நியூயார்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாரத்தான் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் ரேச்சல் அபா உற்சாகத்துடன் ஓடி, பந்தயத்தின் பெரும்பகுதியைக் கடந்தார். பிற்பகல் 1:33 மணியளவில், சென்ட்ரல் பார்க் பகுதியின் 24-வது மைல் கல் அருகே அவர் ஓடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்து, உடனடியாக அருகில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அன்று இரவே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

அளவுக்கு அதிகமான தீவிர உடல் உழைப்பு காரணமாக, எலும்பு மற்றும் தசை நார்கள் வேகமாக சிதைவடைந்து, அதில் உள்ள நச்சுப் பொருட்கள் ரத்தத்தில் கலக்கும் ‘ராப்டோமையோலிசிஸ்’ என்ற தீவிரமான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் சாதாரணமாகத் தொடங்கிய ஒரு நிதி திரட்டும் ஓட்டப்பந்தயம், இளம்பெண்ணின் மரணத்தில் முடிந்தது நியூயார்க் மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in