LATEST NEWS
BREAKING: 6 அதிமுக MLAக்கள் ராஜினாமா வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!
அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காகத் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த இந்த 6 பேரின் முடிவை சபாநாயகர் உடனடியாக அங்கீகரித்தார். சபாநாயகரின் இந்த உத்தரவு அரசியல் சட்ட விதமுறைகளுக்கு எதிரானது என்றும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக கொறடா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, சபாநாயகரின் முடிவில் எவ்வித சட்ட விதிமீறல்களும் இல்லை என்று கூறி வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சபாநாயகரின் இந்த உத்தரவு அரசியலமைப்பு ரீதியாக முழுமையாகச் செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு, ஏற்கனவே சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்விகளாலும் உட்கட்சிப் பூசல்களாலும் தவித்து வரும் அதிமுக தலைமைக்கு மேலும் ஒரு பலத்த அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
