LATEST NEWS
யூடியூப் பார்த்து அறிவியல் சோதனை… உடல் முழுவதும் தீப்பிடித்து துடிதுடித்து இறந்த 11 வயது மகன்… ஒத்த பிள்ளையை பறிகொடுத்து கதறும் குடும்பம்,,, திருப்பத்தூரில் நடந்த பயங்கரம்..!!
திருப்பத்தூர் மாவட்டம்ஜோலார்பேட்டை அருகே, யூடியூப் பார்த்து அறிவியல் சோதனை செய்ய முயன்ற 6-ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். பழைய ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளையரசு என்பவரின் மகன் கவின் (வயது 11), அங்குள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறை நாளில் வீட்டில் இருந்த சிறுவன், தனது மொபைலில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து அதிலிருந்தவாறு ஒரு அறிவியல் பரிசோதனையை செய்து பார்க்க முயன்றுள்ளான்.
அப்போது எதிர்பாராதவிதமாகச் சிறுவன் கவின் மீது தீப்பற்றிக் கொண்டது. மகனைக் காப்பாற்றுவதற்காக ஓடிவந்த தந்தை இளையரசு மீதும் தீ பரவியது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டுத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகக் கவின் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன் கவின், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தான். தீக்காயமடைந்த தந்தை இளையரசுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யூடியூப் பார்த்துச் சிறுவன் செய்த பரிசோதனை உயிரைப் பறித்த துயரம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
