“CM விஜய்யின் பட்டு வேட்டிக்கு பின்னால் இருக்கும் ‘அந்த’ சென்டிமென்ட்..?” ரகசியத்தை உடைத்த அமைச்சர் செங்கோட்டையன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“CM விஜய்யின் பட்டு வேட்டிக்கு பின்னால் இருக்கும் ‘அந்த’ சென்டிமென்ட்..?” ரகசியத்தை உடைத்த அமைச்சர் செங்கோட்டையன்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்பு விழாவில் கோட்-சூட் அணிந்து வந்தது முதல், சமீபத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்தபோது அடர் கருநீல நிறச் சட்டை மற்றும் கால்சட்டை அணிந்தது வரை அவரது மாறுபட்ட உடைத் தேர்வுகள் அரசியல் வட்டாரத்தில் தொடர் விவாதங்களை ஏற்படுத்தின. வெள்ளை வேட்டி-சட்டை என்ற பாரம்பரிய அரசியல் உடைகளைத் தாண்டி, ஐ.ஐ.டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தவெக தொண்டர்கள், தங்களது தலைவரின் இந்த உடைத் தேர்வு அவரின் அரசியல் நிலைப்பாட்டையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் அடையாளம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் உடைத்தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். அப்போது அவர், முதல்-அமைச்சர் விஜய் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பட்டு வேட்டி, சட்டை அணிந்து வருவார் என்றும், மற்ற நாட்களில் வழக்கமான உடையில்தான் வருவார் என்றும் செய்தியாளர்களின் கேள்விகளுக்குத் தெளிவான விளக்கமளித்தார். இதன் மூலம் முதலமைச்சரின் உடை மாற்றம் குறித்து அரசியல் வட்டாரத்தில் நீடித்து வந்த பல்வேறு விவாதங்களுக்கும், யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.



Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in