VIDEOS
நிறைமாத வயிற்றுடன் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை நக்ஷத்ரா… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!!
பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நக்ஷத்ரா. அதில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. இவர் கடந்த சில வருடங்களாக விஷ்வா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் உறவினர்கள் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இரு வீட்டார் முன்னிலையில் மிக எளிமையான முறையில் கோவிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நட்சத்திரா அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து கணவருடன் நிறைமாத வயிற்றுடன் போட்டோ சூட் நடத்திய அந்த புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்து இருந்த நிலையில் இந்த புகைப்படங்களும் வைரலானது. இந்நிலையை நிறைமாத வயிற்றுடன் இவர் நடனமாடி வெளியேற்றுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
