வடிவேலு பட காமெடி நடிகைக்கு இப்படி ஒரு நிலையா?… தக்காளி வித்து பொழப்பு நடத்துறாங்களா?… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

வடிவேலு பட காமெடி நடிகைக்கு இப்படி ஒரு நிலையா?… தக்காளி வித்து பொழப்பு நடத்துறாங்களா?… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் பிரபலமான முன்னணி காமெடி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை பிரியங்கா. இவர் கவுண்டமணி, செந்தில் மற்றும் வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி காமெடி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதன் முதலில் 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு கேரக்டர் ஆர்கெஸ்ட் ஆக பல திரைப்படங்களில் நடித்த இவர் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படி சினிமாவில் காமெடி நடிகையாக திகழ்ந்த பிரியங்காவுக்கு பட வாய்ப்புகள் ஒரு கட்டத்தில் குறைந்த நிலையில் நடிகர் வடிவேலுவும் சினிமாவிற்கு நீண்ட இடைவெளி விட பிரியங்காவிற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

Advertisement

அதனால் சின்ன திரையில் என்ட்ரி கொடுத்தார். தற்போது பல சீரியல்களில் சின்னத்திரை வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு அழைத்த பேட்டியில் மிகவும் கலகலப்பாக பேசியுள்ளார். அந்த வீடியோவில் பிரியங்கா தக்காளி விற்பது போல நடித்துக் காட்டி அசத்தியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in