“கடமை தான் கண்..” திருமணப் பந்தலிலிருந்து நேராக ரயில் என்ஜினுக்குள் நுழைந்த மணமகள்.. நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கடமை தான் கண்..” திருமணப் பந்தலிலிருந்து நேராக ரயில் என்ஜினுக்குள் நுழைந்த மணமகள்.. நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி..!!

Published

on

திருமணக் கோலத்தில் புதுப்பெண் ஒருவர் தனது திருமணக் கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும், விடுப்பு எடுக்காமல் ரயில் என்ஜினுக்குள் லோகோ பைலட்டாக அமர்ந்து ரயிலை இயக்கும் கடமையை அர்ப்பணிப்புடன் செய்த நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பொதுவாகத் திருமணம் என்றாலே மக்கள் நீண்ட நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு, சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்களில் மூழ்கிவிடுவது வழக்கம். ஆனால், கைகளில் வளையல்கள் குலுங்க, பட்டுப்புடவை உடுத்தியபடி இந்த மணமகள் ரயில் கட்டுப்பாட்டுப் பலகத்தைக் கையாண்டு ரயிலை இயக்கும் காட்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

ஒருபுறம் திருமணப் பந்தத்தின் மூலம் தனது புதிய வாழ்க்கையின் தொடக்கம், மறுபுறம் நாட்டின் மிக முக்கியப் பொதுப் போக்குவரத்தான ரயில்வே பணியின் மீதான அசாத்திய பொறுப்புணர்வு என இரண்டையும் இந்த புதுப்பெண் சமமாக கையாண்டுள்ளார். தனது கடமையைச் சற்றும் மறக்காமல் திருமண ஆடையிலேயே வந்து ரயிலின் கமாண்டைக் கையில் எடுத்துள்ள இந்த லோகோ பைலட் பெண்ணின் பணி பக்தியையும், துணிச்சலையும் பாராட்டி இணையவாசிகள் தங்களது வாழ்த்துகளை வாரி வழங்கி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in