அம்மாடியோ.. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய கெமிக்கல்.. அலறியடித்து ஓடிய 2 தொழிலாளர்களுக்கு நேர்ந்த கொடூர கதி.. பதறவைக்கும் சிசிடிவி..!! – cinefeeds
Connect with us

CRIME

அம்மாடியோ.. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய கெமிக்கல்.. அலறியடித்து ஓடிய 2 தொழிலாளர்களுக்கு நேர்ந்த கொடூர கதி.. பதறவைக்கும் சிசிடிவி..!!

Published

on

ஹைதராபாத் காட்டிடான் பகுதியில் உள்ள பீடி தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர கெமிக்கல் வெடிவிபத்தில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்தான முழுமையான காரணங்கள் மற்றும் விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவரவில்லை.

இக்கோர விபத்தில் சாய் என்பவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவரது கால் மற்றும் பாதத்தின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில் ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு நபருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து வெடிவிபத்துக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in