CRIME
“ஐயோ காப்பாத்துங்க..” கதவை உடைத்து உள்ளே சென்ற குடும்பத்தினர்… உறைந்து போன காட்சி.. ஒருதலைக் காதலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில், ஒருதலைக் காதலால் வெறிபிடித்த வாலிபர் ஒருவர், இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரது தொண்டையை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணும் தாக்குதல் நடத்திய நபரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அந்த வாலிபர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து, இளம்பெண்ணை வலுக்கட்டாயமாகக் அறைக்குள் இழுத்துச் சென்று பூட்டியுள்ளார். பின்னர் அவரை கொடூரமாகத் தாக்கி, கத்தியால் தொண்டையை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
இளம்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஆனால், அதற்குள் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளியை அங்கிருந்தவர்கள் உடனடியாகப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கேசவ் குமார் கூறுகையில், பிடிபட்ட குற்றவாளியின் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
