வாணி போஜனுக்கு ஜோடியாகும் யோகி பாபு… தொடங்கியது படப்பிடிப்பு பூஜை… வெளியான புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வாணி போஜனுக்கு ஜோடியாகும் யோகி பாபு… தொடங்கியது படப்பிடிப்பு பூஜை… வெளியான புகைப்படம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வாணி போஜன். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார்.இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தற்போது பகைவனுக்கு அருள்வாய், பாயும் புலி நீ எனக்கு, ஊர் குருவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். இதனைத் தவிர பல பட வாய்ப்புகளும் இவருக்கு குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ராதா மோகன் இயக்கும் “சட்னி சாம்பார்” என்ற திரைப்படத்தில் யோகி பாபுவும் வாணி போஜனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றார்.

Advertisement

இசையமைப்பாளர் அஜேஷ் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ள நிலையில் படத்திற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கின்றார். இந்த திரைப்படத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தற்போது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Disney+ Hotstar Tamil இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@disneyplushotstartamil)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in