LATEST NEWS
“ஊருக்கு முன்பு உத்தமனாக வேஷம் போட்ட விக்ரமன்”.. போட்டோ வெளியிட்டு வம்புக்கு இழுத்த பிக்பாஸ் தனலட்சுமி… வைரல் பதிவு..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விக்ரமன். இவர் டைட்டில் வெல்வார் என்று ரசிகர் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டார். இதற்கு முக்கிய காரணம் இவரின் கண்ணியமும் நேர்மையும் தான். ஆனால் அது அத்தனையுமே பொய் என்று நினைக்கும் அளவிற்கு தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாவது விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் திரும்ப முனுசாமி என்ற வழக்கறிஞர் பரபரப்பு புகார் ஒன்றை முன் வைத்துள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் விக்கிரமன் இதுவரை 12 லட்சம் ரூபாய் வரை பணம் ஏமாற்றி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் விக்கிரமனுடன் இணைந்திருக்கும் புகைப்படம் மற்றும் மெசேஜ் ஸ்கிரீன்ஷாட் ஆகியவற்றை அந்தப் பெண் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அவர் இதுவரை 15க்கும் மேற்பட்ட பெண்களிடம் இப்படி ஏமாற்று வேலை செய்திருப்பதாக அந்த பெண் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தனலட்சுமி விக்ரமனை விமர்சித்து தற்போது வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
