“Marriage வேணுமா, இப்படியே ஜாலியா இருந்திடலாம்”… அமீர் சொன்ன பதிலால் செம டென்ஷனான பாவனி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“Marriage வேணுமா, இப்படியே ஜாலியா இருந்திடலாம்”… அமீர் சொன்ன பதிலால் செம டென்ஷனான பாவனி..!!

Published

on

சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை பாவ்னி ரெட்டி. தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் பிறகு தமிழில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அமீருடன் காதலில் சிக்கி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருவரும் கலந்து கொண்ட நிலையில் காதலை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Advertisement

இந்நிலையில் சமீபத்தில் அமீர் மற்றும் பாவனி இருவரும் இன்ஸ்டால் லைவ் வீடியோவில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் திருமண தேதியை கேட்ட நிலையில் அதற்கு பாவனி நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என கூறினார். ஆனால் அமீர், கல்யாணம் வேணுமா,நாங்க இப்படியே ஜாலியா இருந்திடுரோம் என்று கூறினார். உடனே அதைக் கேட்டு பாவணியின் முகம் மாறி உள்ளது. இருந்தாலும் லைவ் வீடியோவில் தன்னுடைய கோபத்தை அவர் பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in