அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் எனக்கும் இருக்கு.. நடுரோட்டில் பளார்னு ஒன்னு விட்டேன்.. சீரியல் நடிகை மீனா வேமுரி ஓபன் டாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் எனக்கும் இருக்கு.. நடுரோட்டில் பளார்னு ஒன்னு விட்டேன்.. சீரியல் நடிகை மீனா வேமுரி ஓபன் டாக்..!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் கவனமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை மீனா வேமுரி. இவர் சன் டிவியில் நந்தினி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது சன் டிவியில் இலக்கியா தொடரிலும் விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2 சீரியலிலும் நடித்து வருகின்றார். என் நிலையில் இவர் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் தனது வாழ்க்கை பற்றி பகிர்ந்த அவர் முதலில் பிசினஸ் செய்து கொண்டிருந்ததாகவும் அதிலிருந்து விலகி சீரியலில் நடிக்க தொடங்கியதாகவும் கூறினார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி இவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதில் அளித்த இவர், இதுவரை நேரடியாக யாரும் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியது கிடையாது. ஆனால் சில போன் கால் செய்து பட வாய்ப்பு குறித்து பேசியதும் ஆனால் என்று இழுக்கும் போதே நான் அவர்களை ஆப் செய்து விடுவேன் எனவும் இந்த மாதிரி பண்ணுற மாதிரி இருந்தா என்கிட்ட பேசாதீங்க என்று நான் கூறி விடுவேன்.

Advertisement

உடனே அவர்களும் போன் கால் கட் செய்து விடுவார்கள். அது மட்டுமல்லாமல் ஒருவரை நடுரோட்டில் அடித்தது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். ஒரு நாள் காரில் சென்று கொண்டிருக்கும் போது காரை நான் திருப்பியது சரியில்லை என்பதால் என்னை ஓவர் டேக் செய்து இடிப்பது போல் ஒருவர் நிறுத்தினார்.

அதன் பிறகு காரில் இருந்து இறங்கிச் சென்று அவரை கன்னத்தில் பளார் என்று அறைந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினேன். இதனை பெரிது படுத்த வேண்டாம் என்று அங்கிருந்தவர்கள் நினைத்ததால் அவனை விட்டு விட்டதாகவும் அவன் எனக்கு உயிர் பயம் காட்டியதால் இப்படி செய்தேன் என்று கூறியுள்ளார்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in