ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல பாடகரான ஹரிஹரனின் மகன்… அதுவும் எந்த மொழியில் தெரியுமா?… வைரலாகும் டீசர் வீடியோ… – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல பாடகரான ஹரிஹரனின் மகன்… அதுவும் எந்த மொழியில் தெரியுமா?… வைரலாகும் டீசர் வீடியோ…

Published

on

தமிழில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தனது இன்னிசைக் குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் பாடகர் ஹரிஹரன். இவரது பாடல்களை கேட்டு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே’ போன்ற பல வெற்றி பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். 2004 இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும், இரண்டு தேசிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் 500 பாடல்களுக்கு மேல் மட்டுமல்லாமல், ஹிந்தியில் 250 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, சிங்கிளா, போஜ்புரி  என பல மொழிகளில் மொத்தம்  15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் பாடகர் ஹரிஹரன்.

Advertisement

 

பாடகர் ஹரிஹரன் லலிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அக்ஷய் மற்றும் கரண் என இரண்டு மகன்கள் உள்ளனர். தற்பொழுது பாடகர் ஹரிஹரனின் மகன்களில் ஒருவரான கரண் ஹிந்தி சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். அவர் நடித்து இருக்கும் Pyaar Hai Toh Hai என்ற படத்தின் டீஸர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதோ அந்த டீசர் வீடியோ…

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in