மறைந்த ‘காதலர் தினம்’ நடிகர் குணாலின் மனைவி மற்றும் குழந்தைகளை பாத்துருக்கீங்களா?… பலரும் பார்த்திடாத புகைப்படம்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த ‘காதலர் தினம்’ நடிகர் குணாலின் மனைவி மற்றும் குழந்தைகளை பாத்துருக்கீங்களா?… பலரும் பார்த்திடாத புகைப்படம்…

Published

on

தமிழ் திரையுலகில் “காதலர் தினம்” படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் குணால். இவர் மும்பையைச் சேர்ந்தவர். நடிகர் குணால் ஹிந்தியில் ‘தில் ஹை தில் மெய்ன்’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின் தமிழ் மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், புன்னகை தேசம், அற்புதம், பேசாத கண்ணும் பேசுமே,

திருடிய இதயத்தை, உணர்ச்சிகள், நிலவினிலே போன்ற பல தமிழ் படங்களில் நடித்து உள்ளார். பின் கடைசியாக குணால் நடித்த படம் ‘நண்பனின் காதலி’ படம் தான். இப்படி சினிமா உலகில் உயரத்தில் சென்று கொண்டு இருந்த நடிகர் குணால் திடீரென்று 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணம் குறித்து இன்னும் புதிராகவே உள்ளது.

Advertisement

நடிகர் குணால் அவர்கள் மும்பையை சேர்ந்த அனுராதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை, பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. பின் திடீரென ஒருநாள் அனுராதா குணால் இடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இதனை தொடர்ந்து குணால் மனம் நொந்து போன குணால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

தற்பொழுது பல வருடங்களுக்கு பிறகு நடிகர் குணால் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்கள் குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது அவர்களின் சமீபத்திய புகைப்படம் கிடைக்கப்பெறவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in