“ஒரே வருடத்தில் 2,144 கோடி வருமானம் ஈட்டிய தமிழன் சுந்தர் பிச்சை”..! – இது எப்படி சாத்தியமானது தெரியுமா..? – cinefeeds
Connect with us

Uncategorized

“ஒரே வருடத்தில் 2,144 கோடி வருமானம் ஈட்டிய தமிழன் சுந்தர் பிச்சை”..! – இது எப்படி சாத்தியமானது தெரியுமா..?

Published

on

தமிழனின் பெருமை உலகம் முழுவதும் எங்கெங்கும் பரவி கிடக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு திறமை வாய்ந்தவர்கள் தமிழர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இந்நிலையில்,ஆல்பாபெட் நிறுவனம் கடந்த ஆண்டில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 281 மில்லியன் டொலர்கள் வருமானமாக வழங்கியுள்ளது.

இந்திய ரூபாயில் இது 2,144 கோடி ஆகும். இதன் மூலம் உலகிலேயே அதிக ஊதியம் வாங்கும் நிர்வாகிகளில் ஒருவராக தமிழர் சுந்தர்பிச்சை உள்ளார். அவருடைய வருமானத்தில் பெரும்பான்மை சதவீதம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பங்குகள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகும். அவருக்கு இப்படியாக கிடைக்கும் ஈவுத்தொகை வருமானம் மட்டுமே ஆல்பாபெட் ஊழியர்களின் மொத்த ஊதிய சராசரியைக் காட்டிலும் 1,085 மடங்கு உயர்ந்துள்ளது. சுந்தர் பிச்சையின் ஆண்டு ஊதியம் 2019-ல் 6.5 லட்சம் டொலராக இருந்தது. இது இந்த ஆண்டு 2 மில்லியன் டொலராக உயர்த்தப்பட்டுள்ளது. லாரி பேஜ், செர்கி பிரின் இருவரும் தங்கள் பொறுப்புகளில் இருந்து வெளியேறியதை அடுத்து ஆல்பாபெட் சிஇஓ பதவி சுந்தர்பிச்சைக்கு வழங்கப்பட்டது.

Advertisement

தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் பல்வேறு சவால்கள் சுந்தர் பிச்சைக்கு முன் உள்ளன. ஏற்கெனவேவேலைவாய்ப்பு, முதலீடு குறித்து சுந்தர் பிச்சை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in