Uncategorized
இரவு முழுவதும் மொட்டை மாடியில் தூங்கிய அண்ணன்..!! – தேடிப் போன தங்கைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!
சேலத்தை சேர்ந்தவர் அபிஷேக் மாறன்(வயது 26), கார் டிரைவரான இவருக்கும், ஜெபினா என்ற பெண்ணுக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இதனால் அபிஷேக் மாறன், அவரது பாட்டி மற்றும் தங்கை அபிநயாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சாப்பிட்டு விட்டு நேற்று இரவு மொட்டை மாடிக்கு அபிஷேக் தூங்க சென்றிருக்கிறார். காலையில் விடிந்து வெகு நேரமாகியும் அண்ணன் வராததால், அபிநயா மேலே சென்று பார்த்துள்ளார். அப்போது ர த்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அண்ணனை பார்த்ததும் து டித் துள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர், உடனடியாக பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த அதிகாரிகள் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் பொலிசார் இதற்காக 4 தனிப்படைகளை அமைத்துள்ளனர், இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
