CINEMA
“எல்லாமே கனவு.. ஆனா இப்படி ஆகிடுச்சே…” ஜனநாயகன் பட காட்சிகள் லீக்கானதால் கண்ணீர் விட்ட எச்.வினோத்…!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். ஏற்கனவே தணிக்கை வாரியத்தின் கெடுபிடிகளால் சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இப்படம் ரிலீஸாகத் தாமதமாகி வருகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில், படத்தின் முக்கியக் காட்சிகள் திடீரென சமூக வலைதளங்களில் கசிந்திருப்பது படக்குழுவினரையும் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு வெளியாகும் கடைசிப் படம் என்பதால், இது திட்டமிட்ட சதி தானா என்ற கோணத்திலும் பேச்சுக்கள் எழுகின்றன.
படம் கசிந்தது குறித்து இயக்குநர் எச்.வினோத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகுந்த மனவேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார். திரையில் வரும் ஒவ்வொரு காட்சியும் பலரின் உழைப்பையும், பல ஆண்டுகால கனவையும் சுமந்து நிற்பதாகக் கூறிய அவர், ரிலீஸிற்கு முன்பே இப்படிச் சட்டவிரோதமாகப் பகிர்வது படைப்பாளிகளின் இதயத்தை உடைக்கும் செயல் என ஆதங்கப்பட்டுள்ளார். கசிந்த காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் என்றும், முறைப்படி திரையரங்குகளில் படம் வெளியாகும்போது ஆதரவு தருமாறும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
