நாட்டையே உலுக்கிய நடிகையின் கொடூர கொலை வழக்கு.. சொத்துக்காக 17 முறை குத்திய டிரைவர்: செப்டிக் டேங்கில் அழுகிய பிணங்கள் – நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CINEMA

நாட்டையே உலுக்கிய நடிகையின் கொடூர கொலை வழக்கு.. சொத்துக்காக 17 முறை குத்திய டிரைவர்: செப்டிக் டேங்கில் அழுகிய பிணங்கள் – நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!

Published

on

80-களில் தென்னிந்தியத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய ராணி பத்மினி மற்றும் அவரது தாய் இந்திரகுமாரி ஆகியோர், தங்களது வீட்டில் வேலை செய்தவர்களாலேயே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ராணி பத்மினி, தனது தாயாருடன் சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தார். அப்போது செய்தித்தாள் விளம்பரம் மூலம் வேலைக்குச் சேர்ந்த ஓட்டுநர் ஜேக்கப் ஜெபராஜ், சமையல்காரர் கணேசன் மற்றும் காவலாளி லட்சுமி நாராயணன் ஆகியோர் இந்தத் துரோகத்தை அரங்கேற்றினர்.

நடிகை ராணி பத்மினி சொத்து வாங்குவதற்காக வீட்டில் வைத்திருந்த ₹5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடிக்க இந்த மூவரும் திட்டம் தீட்டினர். கடந்த 1986 அக்டோபர் 15 அன்று, அவர்கள் கத்தியுடன் திருட முயன்றபோது அதைத் தடுத்த தாய் இந்திரகுமாரியையும், சத்தம் கேட்டு ஓடிவந்த ராணி பத்மினியையும் ஜேக்கப் ஜெபராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள் சரமாரியாகக் குத்திக் கொலை செய்தனர். இதில் ராணி பத்மினியின் மார்பில் மட்டும் 17 கத்திக் குாயங்கள் விழுந்தன. பின்னர், இருவரின் உடல்களையும் வீட்டின் செப்டிக் டேங்கில் வீசிவிட்டு கொலையாளிகள் தப்பினர்.

Advertisement

கொலை நடந்து 4 நாட்களுக்குப் பிறகு வீட்டின் அருகே வீசிய துர்நாற்றத்தை அடுத்து, போலீசார் அழுகிய நிலையில் இருந்த இருவரின் உடல்களையும் மீட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 1989-ல் மூவருக்கும் மரண தண்டனை விதித்தது. எனினும், 1990-ல் மேல்முறையீட்டின் போது போதிய ஆதாரங்கள் இல்லாததால் மற்ற இருவர் விடுவிக்கப்பட்ட நிலையில், முக்கியக் குற்றவாளியான டிரைவர் ஜெபராஜின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in