பொம்பள பிள்ளைங்கள பாதுகாக்க துப்பில்ல… வழக்கம்போல ஓடிடுங்க தமிழ்நாடாவது தப்பிக்கும்.. தவெகவை கடுமையாக சாடிய திமுக ஐடி விங்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பொம்பள பிள்ளைங்கள பாதுகாக்க துப்பில்ல… வழக்கம்போல ஓடிடுங்க தமிழ்நாடாவது தப்பிக்கும்.. தவெகவை கடுமையாக சாடிய திமுக ஐடி விங்..!!

Published

on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூர் பகுதியில், வீடு புகுந்து தம்பதியினரை அரிவாளால் தாக்கிவிட்டு, அவர்களது இரண்டு பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரத் தாக்குதலில் தாய் மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த தந்தை முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காதல் விவகாரம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தை சுட்டிக்காட்டி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி (DMK IT Wing) தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளது. “இந்த விஜய் ஆட்சியில் பெண் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது” என்று சாடியுள்ள திமுக ஐடி விங், நாட்டில் இவ்வளவு கொடூரங்கள் நடக்கும் போதும் எதையும் கண்டுகொள்ளாமல், முதலமைச்சர் ஜோதிடரின் பேச்சைக் கேட்டு செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேடையில் ஏறிப் பேசுவதோடு நிறுத்தாமல், பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கத் துப்பு இல்லை என்றால் வழக்கம் போல ஓடிவிடுங்கள், தமிழ்நாடாவது தப்பிக்கும் என அக்கடினமான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் ஏற்கனவே செஞ்சி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் சிறுமிகள் காணாமல் போன சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. செஞ்சியில் மாயமான சிறுமி வழக்கு தற்போதுதான் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், தற்போது தூத்துக்குடியில் வீடு புகுந்து தாயைக் கொலை செய்துவிட்டு, இரண்டு பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்றிருக்கும் துணிச்சலானச் சம்பவம் பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in