“மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?” ராமாயணம் மேடையில் AR ரஹ்மான் கொடுத்த அட்வைஸ்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?” ராமாயணம் மேடையில் AR ரஹ்மான் கொடுத்த அட்வைஸ்..!!

Published

on

சென்னையில் உள்ள நந்தம்பாக்க வர்த்தக மையத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா – ரைஸ் ஆஃப் எ லெஜெண்ட்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா அமேசான் மியூசிக் சார்பில் நடைபெற்றது. இத்திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், நடிகை சாய் பல்லவி சீதையாகவும், கே.ஜி.எஃப் யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ள இத்திரைப்படம் சைனீஸ், ஜப்பனீஸ் உட்பட சுமார் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, வரும் நவம்பர் 5-ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் பல்வேறு இசைக் கலைஞர்களுடன் இணைந்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தியதுடன், படத்தின் தமிழ் பாடல்களுக்கான லோகோவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

மேடையில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான், 2014-ல் நியூயார்க்கிலிருந்து சதீஷ் என்பவர் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் “நீங்கள் நிச்சயம் ராமாயணத்திற்கு இசையமைப்பீர்கள்” எனக் குறிப்பிட்ட கனவு தற்போது நனவாகியிருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதேபோல தென்னிந்திய வட இந்திய இசை அனைத்துமே அதிக அளவு பக்தி நிறைந்து இருக்கிறது. கிருஷ்ணர், ராமர் போன்ற கடவுள்களுக்கு பாடக்கூடிய துதி பாடல்களாகட்டும், கீர்த்தனை, தும்பி, வர்ணம் இவை அனைத்திலும் கிடைக்கக்கூடிய உந்துதல் மூலமாக ஒரு படைப்பாளியாக நான் இதை உருவாக்கியிருக்கிறேன்.‎ அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை சாய் பல்லவி, இத்திரைப்படத்தை உலகத் தரத்தில் கொண்டு வரப் படக்குழுவினர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வருவதாகவும், தான் இந்த வரலாற்றுப் பயணத்தில் 3 ஆண்டுகள் பயணித்துள்ளதாகவும் கூறினார். மேலும், ராமாயணக் கதையில் சீதை கதாபாத்திரத்தில் நடித்ததை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுவதாக சாய் பல்லவி நெகிழ்ந்து பேசினார்.


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in