CINEMA
26-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித் – ஷலினி.. தனது மனைவியுடன் ரொமான்டிக் போஸ்…!!
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான அஜித் மற்றும் ஷாலினி தமையினர், ஏப்ரல் 24 அன்று தங்களது 26-வது திருமண நாளைக் கொண்டாடினர். 1999-ம் ஆண்டு ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் நடித்தபோது காதலித்து வந்த இவர்கள், 2000-ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். தற்போது 26 ஆண்டுகளைக் கடந்து கோலிவுட்டின் மிகச்சிறந்த தம்பதிகளாகத் திகழ்ந்து வருகின்றனர்.
இந்த விசேஷ நாளைத் தனது குடும்பத்தினருடன் எளிமையான முறையில் கேக் வெட்டி அஜித் கொண்டாடினார். இந்தப் புகைப்படங்களை நடிகை ஷாலினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அஜித்தும் ஷாலினியும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டிவிடும் அழகிய தருணங்கள் இடம் பெற்றுள்ளன. எந்தவொரு ஆடம்பரமும் இன்றி, மிகவும் இயல்பாக தங்களது இல்லத்திலேயே இந்தக் கொண்டாட்டத்தை அவர்கள் முடித்துள்ளனர்.
சமீபத்தில் கார் பந்தய வீரராக சர்வதேச அளவில் முத்திரை பதித்து வரும் அஜித், தனது ரேஸிங் பணிகளுக்கு இடையே இந்த நாளைக் கொண்டாடுவதற்காகச் சென்னை திரும்பியிருந்தார். அஜித்தின் இந்தப் புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். திரைத்துறையில் இத்தனை ஆண்டுகள் கடந்தும் மாறாத அன்புடன் இருக்கும் இந்தத் தம்பதிகள் பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.
