LATEST NEWS
கோடி கோடியாக வாங்கும் ஹீரோக்கள்…!குமுறிய கே. ராஜன்…! அவர் தற்கொலைக்கு இதுதான் காரணமா…!பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்…!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கே. ராஜன் நேற்று அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமாவுக்காகவும், நலிவடைந்த திரைப்பட தொழிலாளர்களுக்காகவும் பல மேடைகளில் ஓங்கி முழங்கிய ஒரு குரல் இப்படி திடீரென மௌனமானதை யாராலும் நம்ப முடியவில்லை. இந்தத் துயரச் சம்பவம் குறித்து சினிமா விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கே. ராஜனின் பன்முகத்திறமை குறித்தும், அவரது மறைவின் பின்னணியில் இருக்கும் உண்மை நிலவரங்கள் குறித்தும் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில், “கே. ராஜன் ஒரு தயாரிப்பாளர், இயக்குநர் என்பதைத் தாண்டி சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும் இருந்தவர். 1982ஆம் ஆண்டிலேயே காந்தி காமராஜ் கட்சியின் சார்பில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டவர். அவர் கொஞ்சம் முன்கோபியாக (டென்ஷன் பார்ட்டி) தெரிந்தாலும், மனதில் எதையும் வைத்துக்கொள்ளாத வெள்ளை மனிதர். தமிழ் சினிமாவில் திருட்டு வீடியோ சிடிக்கள், பஸ் வீடியோக்கள், கேபிள் பைரசி என சினிமாவுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக முதல் ஆளாகக் குரல் கொடுத்துப் போராடியவர். கமல்ஹாசன் படங்கள் வெளியான சமயங்களில் கூட திருட்டு வீடியோக்களை தடுத்து நிறுத்த களத்தில் நின்றவர் கே.ராஜன் தான்” என அவரது திரை உலகப் பங்களிப்பை நினைவுகூர்ந்துள்ளார்.
விஜய், பிரபுதேவா நடித்த ‘பிரம்மச்சாரி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான கே. ராஜனுக்கு, பிரபுதேவா மற்றும் பாண்டியராஜன் நடித்த ‘டபுள்ஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. தன் மகன்களை ஹீரோவாக்க அவர் எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும், அவரது மகன் பிரபு தற்போது ஆர்.ஜே.பாலாஜியை வைத்து ‘எல்கேஜி’ (LKG) போன்ற படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குநராக வலம் வருகிறார். மற்றொரு மகன் காமராஜ் பள்ளியை கவனித்து வருகிறார். கொரோனா காலத்தில் குடும்பத்திலிருந்து விலகி ஹோட்டலில் தங்கியிருந்தது குறித்துத் தனக்கும் ராஜனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையையும், பின்னர் வீட்டில் இருந்துதான் சாப்பாடு வருகிறது, மகன்களும் வந்து தங்குவார்கள் என்று கூறி ராஜன் தன்னிடம் சமாதானம் ஆனதையும் பயில்வான் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அவரது தற்கொலைக்கான காரணம் குறித்துப் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள பயில்வான் ரங்கநாதன், “கே. ராஜன் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார் என்று வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. அவர் யாரிடமும் கடன் வாங்கிச் சிக்கியவர் அல்ல; மாறாக, அவர்தான் பல பேருக்கு கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வரை கடன் கொடுத்திருந்தார். சமீபத்தில் அவருக்கு பேஸ்மேக்கர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. சம்பவத்தன்று காரில் வந்தவர், அடையாறு பகுதியில் காரை நிறுத்தச் சொல்லி ‘வாக்கிங் போகிறேன்’ எனக் கூறிவிட்டுத் திடீரென ஆற்றில் குதித்துள்ளார். நடிகர்கள் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளத்தைக் குறைத்து, படம் ஓடிய பிறகே முழு சம்பளம் தரும் முறையைக் கொண்டு வர வேண்டும் எனத் துணிச்சலாகப் பேசிய அந்த நல்ல மனிதரின் முடிவு திரையுலகிற்குப் பேரிழப்பு” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
