“ரவி மோகன் கண்ணீருக்குப் பின் இருக்கும் ரகசியம்…!”சுயமரியாதையை இழந்துட்டாரா ரவி மோகன்? உண்மையை உடைத்த தயாரிப்பாளர் பாலாஜி பிரபு …!” – cinefeeds
Connect with us

CINEMA

“ரவி மோகன் கண்ணீருக்குப் பின் இருக்கும் ரகசியம்…!”சுயமரியாதையை இழந்துட்டாரா ரவி மோகன்? உண்மையை உடைத்த தயாரிப்பாளர் பாலாஜி பிரபு …!”

Published

on

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் நடிகர் ரவி மோகனின் குடும்பப் பிரச்சனைதான் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. எப்போதும் துள்ளலாகவும், கலகலப்பாகவும் திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு முன்னணி நடிகர், சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் தன் கட்டுப்பாட்டை இழந்து, கண்ணீருடன் மனவேதனையைப் பகிர்ந்துகொண்ட காட்சி ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. அவரது இந்த உணர்ச்சிவசப்பட்ட பேச்சு ரசிகர்களைத் தாண்டி, சாமானிய பொதுமக்களின் மனங்களையும் கணக்கச் செய்து, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சூழலில், சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அளித்துள்ள பேட்டி தற்போதைய நிலவரத்தை மேலும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. ரவி மோகனின் நிலையை எண்ணி வருந்திய அவர், “தம்பி ரவி மோகன் முற்றிலும் உடைந்துபோய்தான் பேசியிருக்கிறார். அவரை அந்த கோலத்தில் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. இவ்வளவு பெரிய நற்பெயரும், அந்தஸ்தும் கொண்ட ஒரு மனிதர், தன் சுயமரியாதையையும் தாண்டி இப்படி பகிரங்கமாக வந்து கதறுகிறார் என்றால், அவர் எந்த அளவிற்கு மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சமூகத்தில் ஒரு தனித்துவமான பிம்பத்தையும், குறிப்பாக குடும்ப ரசிகர்களின் பேராதரவையும் பெற்ற ஒரு கதாநாயகன், உலகமே பார்க்கும் மேடையில் தன் தனிப்பட்ட சோகத்தை உடைப்பது சாதாரண விஷயமல்ல. “அவர் தன் வேதனையை இப்படி வெளிப்படுத்தியுள்ளார் என்றால், அவருக்குள் இருக்கும் வலியும் துரோகமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்குப் பெரியதாக இருக்க வேண்டும்” என்று பாலாஜி பிரபு சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சம்பவம், திரைக்குப் பின்னால் இருக்கும் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களையும் பொதுமக்களுக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in