CINEMA
யாரும் என்னோடு இருக்க விரும்பல…!”பிக் பாஸில் 200 கோடி சம்பளம்.. ஆனால் வாழ்க்கை தனிமையில் ? சல்மான் கானின் உருக்கமான பதிவு…!
ஹிந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சல்மான் கான், வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். குறிப்பாக, உலகளவில் புகழ்பெற்ற ‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வரும் அவர், இதன் மூலம் மட்டுமே வருடந்தோறும் சுமார் 150 முதல் 200 கோடி ரூபாய் வரை சம்பளமாகப் பெறுகிறார் என்று கூறப்படுகிறது. சினிமா, விளம்பரங்கள், சின்னத்திரை எனப் பல வழிகளில் கோடிக்கணக்கில் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும், சல்மான் கானின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதுமே ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.
தற்போது 60 வயதை எட்டியுள்ள சல்மான் கான், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் பாலிவுட்டின் ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலராகவே’ வலம் வருகிறார். இவரது திருமணம் குறித்து பல ஆண்டுகளாகப் பல்வேறு வதந்திகளும் செய்திகளும் வெளியாகி வரும் நிலையில், தற்போது அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ‘தனிமை’ குறித்துப் பகிர்ந்துள்ள ஒரு பதிவு இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி, ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்திலும் பெரும் வைரலாகி வருகிறது.
தனது ஃபிட்டான உடலமைப்பைக் காட்டும் வகையிலான ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள சல்மான் கான், அதில் “நான், எனக்குள், என்னோடு… தனியாக இருப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ‘அலோன்’ (Alone), மற்றொன்று ‘லோன்லி’. தனியாக இருப்பது என்பது நம்முடைய சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அமைவது; ஆனால் தனிமை என்பது அடுத்தவர்கள் யாரும் உங்களுடன் இருக்க விரும்பாதபோது ஏற்படுவது. இதற்கு மேல் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று தத்துவார்த்தமாகப் பதிவிட்டுள்ளார். சல்மான் கானின் இந்த எதார்த்தமான பதிவு அவரது ரசிகர்களிடையே தற்போது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
