LATEST NEWS
“என்னைக் கட்டிக்கிட்டா என் தங்கச்சியையும் கட்டிக்கணும்”.. அக்கா போட்ட விசித்திர கண்டிஷன்.. திகைத்துப்போன மாப்பிள்ளை வீட்டார்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்..!!
அசாம் மாநிலத்தில் இரு சகோதரிகளுக்கு இடையே உள்ள அசைக்க முடியாத பாசப் பிணைப்பு, பார்ப்பவர்களை ஆச்சரியத்திலும், விவாதத்திலும் ஆழ்த்தும் வகையில் ஒரு விசித்திரமான திருமணத்தில் முடிந்துள்ளது. அங்குள்ள ஒரு குடும்பத்தில் மூத்த மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டி, மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்துள்ளனர். அப்போது அந்த மூத்த மகள், “என்னைத் திருமணம் செய்ய வேண்டுமானால், எனது தங்கையையும் சேர்த்தே திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்ற விசித்திரமான நிபந்தனையை விதித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் கடும் கோபமடைந்து, அந்தத் திருமணப் பேச்சை அப்படியே ரத்து செய்து பாதியிலேயே கலைந்துள்ளனர்.
இருப்பினும், அந்த இரு சகோதரிகளும் தங்களால் ஒருவரையொருவர் பிரிந்து வாழ முடியாது என்பதில் அடுத்த சில மாதங்களுக்கு மிகவும் பிடிவாதமாக இருந்துள்ளனர். தங்களுக்குள் யார் யாருக்குத் திருமணம் நடந்தாலும் பரவாயில்லை, ஆனால் இருவருக்கும் ஒரே வீட்டில் தான் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றனர். இறுதியில் மகள்களின் மகிழ்ச்சிக்காகப் பெற்றோர் தங்களது பிடிவாதத்தை கைவிட்டு, மீண்டும் மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து விபரத்தைக் கூறிச் சம்மதிக்க வைத்துள்ளனர். இந்தத் திருமணம் இரு வீட்டார் முன்னிலையில் மிக விமரிசையாக நடந்து முடிந்த நிலையில், இதில் கலந்துகொண்ட மக்கள் சிலர் இந்த அக்கா-தங்கை பாசத்தைப் பாராட்டியும், சிலர் இந்த விசித்திர முடிவை எதிர்த்தும் பேசி வருகின்றனர்.
