ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நடிகை….! சிக்கியது கடிதம்….. தற்கொலைக்கு யார் காரணம்?….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நடிகை….! சிக்கியது கடிதம்….. தற்கொலைக்கு யார் காரணம்?….!!!!

Published

on

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாடல் அழகியான அகன்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம், மும்பையில் வசித்து வந்த இளம் பெண் அகன்ஷா மோகன். இவர் மாடல் துறையில் பணியாற்றி வருகிறார். மராட்டியில் சியா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த 16ஆம் தேதி ரிலீசானது . படங்களில் மட்டுமல்லாமல் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அந்தேரி ஹோட்டலில் தங்கி இருந்த இவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

ஹோட்டலில் தங்கியிருந்த அகன்ஷா மோகன் நேற்று வெகுநேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் பிணமாக கிடந்தார்.

இதைத்தொடர்ந்து அந்த உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் இருந்து ஒரு கடிதம் கிடைத்தது. அதில் என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை யாரையும் தொல்லை செய்ய வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in