LATEST NEWS
ஆக்ரோஷமான வரவேற்பு…..! “5 மொழிகளில் நன்றி கூறிய ஆதித்ய கரிகாலன்”….. நெகிழ்ச்சி வீடியோ….!!!!
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் என்று பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளது. இந்த திரைப்படத்தை பலரும் எடுக்க முயற்சி செய்து அதை எடுக்க முடியாத நிலையில் மணிரத்தினம் பல ஆண்டுகளாக முயற்சி செய்து இதை சாதித்து காட்டியுள்ளார்.
சினிமா வரலாற்றில் பல ஆண்டுகளுக்கு பின்னர் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். இது தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி உள்ளது. இதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடித்திருந்தார். இவர் நடித்திருந்தார் என்று கூறுவதை காட்டிலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்று தான் கூற வேண்டும்.
அவரின் நடை, உடை, பாவனை முதற்கொண்டு அனைத்துமே கரிகாலனை பார்ப்பது போன்ற அனைவருக்கும் ஒரு உணர்வை கொடுத்தது. இதற்கெல்லாம் நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் விக்ரம் டிவீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அனைவருக்கும் நன்றி. “தேங்க்ஸ், தன்னியவாதலு, நன்னி, சுக்ரியா, நன்றி..” என்று ஐந்து மொழிகளிலும் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அன்பு இதயங்களுக்கு என் இதய நன்றி. #PonniyanSelvan #ManiRatnam @LycaProductions @arrahman @actor_jayamravi @Karthi_Offl @trishtrashers #AishwaryaRaiBachchan pic.twitter.com/YxJczs44gh
— Vikram (@chiyaan) October 1, 2022
பின்னர் பொன்னியின் செல்வனுக்கு கிடைத்த வரவேற்பும், ஆதித்த கரிகாலனுக்கு கிடைத்த ஆக்ரோஷமான ஃபீட் பேக் அனைத்திற்கும் மிகவும் நன்றி என்று அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறி இருந்தார். நான் நடிக்கும் படங்களின் கதாபாத்திரங்களை என்னுடைய ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் இந்த படத்தை அவருடைய படமாக கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கின்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
