LATEST NEWS
“இவனுங்கள உயிரோடவே விடக் கூடாது…!” கொலை வழக்கில் கைதான சிறுர்களை… போலீஸ் முன்னிலையிலேயே செருப்பால் அடித்த பெண்…! வைரல் வீடியோவால் பரபரப்பு..!!!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களைக் காவல் துறை வாகனத்தின் முன்பகுதியில் கட்டி வைத்து அழைத்துச் சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காத்ராஜ் ஏரி அருகே கணேஷ் ரவீந்திர மால்வே என்ற 17 வயது சிறுவன், பழைய முன்விரோதம் காரணமாக ஏழு பேர் கொண்ட சிறுவர்கள் கும்பலால் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாரதி வித்யாபீட காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவர்களைக் கைது செய்தனர். அதன் பிறகு, பலத்த மழைக்கு நடுவே காவல் வாகனத்தின் போனெட் பகுதியில் சிறுவர்களைக் கட்டி வைத்து காவலர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த கூட்டத்தில் இருந்து, கொல்லப்பட்ட சிறுவனின் உறவினர் எனக் கூறப்படும் பெண் ஒருவர், காவல்துறையினரின் முன்னிலையிலேயே குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிறுவனைத் தனது செருப்பால் தாக்கும் காட்சியும் இந்த வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
எஃப்.ஐ.ஆர் தகவலின்படி, கணேஷ் மால்வே தனது மொபைல் போனைப் பழுதுபார்க்கும் கடையில் இருந்து வாங்கச் சென்றபோதுதான் இத்தாக்குதலுக்கு ஆளானார். இச்சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா, ஆயுதச் சட்டம் மற்றும் மகாராஷ்டிர காவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களை வாகனத்தில் கட்டி அழைத்துச் சென்ற விதம் குறித்தோ அல்லது பெண் தாக்கியது குறித்தோ காவல்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை.
