“என் அம்மாகிட்டயே லஞ்சம் வாங்குறியா..?” லண்டனில் இருந்து CM விஜய்க்கு பறந்த வாட்ஸ்அப் புகார்.. அலறும் கல்வித்துறை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் அம்மாகிட்டயே லஞ்சம் வாங்குறியா..?” லண்டனில் இருந்து CM விஜய்க்கு பறந்த வாட்ஸ்அப் புகார்.. அலறும் கல்வித்துறை..!!

Published

on

லண்டனிலிருந்து தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பப்பட்டுள்ள லஞ்சப் புகார் மனு தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டாரத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஆசிரியை சீனித்தாய் என்பவரின் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் மாதாந்திர ஓய்வூதியத்தை முறைப்படி வழங்குவதற்காக, அங்கிருந்த வட்டார கல்வி அலுவலர் ₹40 ஆயிரம் லஞ்சமாகப் பெற்றுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியை, தன் மகனிடம் இது குறித்து முறையிட்டுள்ளார்.

தற்போது லண்டனில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஆசிரியையின் மகன் சதீஷ், தன் தாய்க்கு நேர்ந்த இந்த அநீதியைக் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கத் துணிந்தார். தமிழக அரசின் ‘லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கும்’ பிரத்யேக வாட்ஸ்அப் எண் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு லண்டனிலிருந்தபடியே ஆதாரங்களுடன் அவர் புகார் அனுப்பியுள்ளார். இந்த வெளிநாட்டுப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in