LATEST NEWS
“இந்தியாவில் கர்ப்பமாக இருப்பது ஒரு நரக வேதனை!”.. குமுறலைக் கொட்டித் தீர்த்த ரஷ்ய பெண்.. வீடியோவைப் பார்த்து மேடையில் நெட்டிசன்கள்..!!
தாயாவது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் உன்னதமான உணர்வாக இருந்தாலும், ரஷ்யாவைச் சேர்ந்த சோஃபியாவுக்கு இந்தியாவில் தனது முதல் கர்ப்ப காலத்தைக் கழிப்பது பெரும் சவாலாக அமைந்தது. மொஹாலியில் வசிக்கும் இவர், இந்தியக் கலாச்சாரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் ஓய்வெடுக்க வலியுறுத்தப்படுவதையும், உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பதையும் சுட்டிக்காட்டி, கர்ப்பம் ஒரு நோயல்ல என்று கூறியுள்ளார். மேலும், தனது வயிற்றை மறைக்கும் உடைகளை அணியுமாறு மக்கள் குறுக்கிடுவது, தாய்மொழி அல்லாத ஆங்கிலம்/இந்தியில் மருத்துவ பரிந்துரைகளைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் சிரமம் மற்றும் இந்தியாவின் தாங்க முடியாத வெப்பமும் ஈரப்பதமும் தனது நிலையை மேலும் கடினமாக்கியதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் விவரித்துள்ளார்.
https://www.instagram.com/reel/Da8I1VIvPcR/?utm_source=ig_embed&ig_rid=ARy6nC-7LsLsU1KqNeBvakk
10 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டு வைரலாகி வரும் இந்தப் பதிவிற்கு இந்திய இணையவாசிகள் பலதரப்பட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியப் பெண்களின் உடலமைப்பும் சூழலும் வேறுபடுவதால் முன்னெச்சரிக்கையாக ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுகிறது என்றும், தீய பார்வைகளிலிருந்து பாதுகாப்பதற்காகவே வயிற்றை மறைக்கச் சொல்கிறார்கள் என்றும் சிலர் விளக்கமளித்துள்ளனர். இந்திய முறைகளில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் சுற்றிப் பாருங்கள்.நாட்டின் 140 கோடி மக்கள் தொகை தற்செயலாகப் பெருகவில்லை என்று மற்றொருவர் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
