“ரவி.. தயவுசெஞ்சு எந்த தவறான முடிவும் எடுக்காதே…!””அப்பா, அம்மா கூடவே இரு…! – கண்ணீருடன் கதறிய நடிகருக்கு அம்பிகா விடுத்த உருக்கமான வேண்டுகோள்…! – cinefeeds
Connect with us

CINEMA

“ரவி.. தயவுசெஞ்சு எந்த தவறான முடிவும் எடுக்காதே…!””அப்பா, அம்மா கூடவே இரு…! – கண்ணீருடன் கதறிய நடிகருக்கு அம்பிகா விடுத்த உருக்கமான வேண்டுகோள்…!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன்  கடந்த வாரம் அளித்த பேட்டி ஒட்டுமொத்தத் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது விவாகரத்து விவகாரம் மற்றும் அதற்கு முன்னும் பின்னும் வாழ்க்கையில் எதிர்கொண்ட கடுமையான நெருக்கடிகளை அவர் கண்ணீருடன் விவரித்தார். விவாகரத்து வழக்கு முடியும் வரை தான் புதிய படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும், தனது படங்கள் எதுவும் வெளியாகாது என்றும் அவர் அறிவித்தார். மேலும், “எனது மகன்களை என்னிடம் பேசக்கூட விடுவதில்லை; அவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் விவாகரத்து கோரினேன். ஆனால், இப்போது எனக்கு எதிராகப் பில்லி சூனியம் செய்கிறார்கள், அதனால் நான் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அனைவரையும் பழிவாங்கிவிட்டு நானும் போய்விடுவேன்” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ரவி மோகன், தன் மீது சுமத்தப்படும் அவதூறுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். “45 வயதில் நான் அழகில் மயங்கி ஒரு பெண்ணின் பின்னால் சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். அழகான பெண்களுடன் நடிப்பதே எனது வேலைதான்; அப்படி அழகில் மயங்குபவனாக இருந்தால் நான் எப்போதோ சென்றிருக்க வேண்டுமே” என்று கேள்வி எழுப்பினார். அதோடு, இந்த விவகாரத்தில் ‘இட்லி நடிகை’ என்று குறிப்பிடப்படும் ஒரு நடிகைக்கும் முக்கியப் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கருத்துச் சொல்ல அந்த நடிகைக்கு எந்தவிதத் தகுதியும் இல்லை என்றும் ஆவேசமாக விளாசினார்.

Advertisement

ரவி மோகனின் இந்த அதிரடியான மற்றும் எமோஷனலான பேட்டி சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், 80-களின் முன்னணி நடிகையான அம்பிகா அவருக்கு ஆறுதல் கூறி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரவி, நீ முதலில் பலவீனமாக உணராதே. எல்லாம் சரியாகிவிடும். கடவுள் உன்னைச் சோதிக்கிறார், கொஞ்சம் தாமதிக்கிறார் என்று நினைத்துக் கொள். எந்தவொரு தவறான முடிவுகளையும் எடுத்து உன்னை நீயே காயப்படுத்திக் கொள்ளாதே” என்று அன்போடு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், “குழந்தைகள் மீது நீ வைத்திருக்கும் பாசமே, உனது வாழ்க்கை மீதான ப்ரியத்தை உனக்கு மீண்டும் கொண்டு வரும். கடவுளிடம் வேண்டிக் கொள், நன்றாகத் தூங்கு. உனது அப்பா, அம்மாவுடன் இரு அல்லது உன்னை நன்கு அறிந்தவர்களுடன் நேரத்தைச் செலவிடு” என்று அம்பிகா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். கடுமையான மன உளைச்சலில் இருக்கும் ரவி மோகனுக்குத் தாய் போன்ற அரவணைப்புடன் அட்வைஸ் செய்துள்ள நடிகை அம்பிகாவின் இந்த சமூக வலைதளப் பதிவு, தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in