LATEST NEWS
தினமும் குடித்துவிட்டு டார்ச்சர் செய்த கணவன்…!அம்மிக்கல்லால் முடிந்த அராஜகம்! குடிகார கணவனுக்கு மாமியார் கொடுத்த மரண அடி…!போலீசுக்கே ஷாக் கொடுத்த மாமியார்! போனை போட்டு சொன்ன ‘அந்த’ வார்த்தை…!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிமங்கலம் காந்தி நகர் பகுதியில் மது பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு, கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான தினகரன் என்பவர், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அமலா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த தினகரன், தனது மனைவி, மாமியார் விஜயா மற்றும் இரு மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
தினகரனுக்குத் தீவிர மதுப்பழக்கம் இருந்ததால், அவர் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே நீண்ட நாட்களாகவே குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல தினகரன் போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு வந்து, மனைவி அமலாவிடம் வம்புக்கு இழுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். மகளுக்கு ஆதரவாக வந்த மாமியார் விஜயா, தினகரனைக் கண்டித்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
இந்த மோதலின் போது, ஆத்திரமடைந்த தினகரன் மனைவி அமலாவையும், அவரைத் தடுக்க வந்த மாமியார் விஜயாவையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். தினகரனின் தொடர் அத்துமீறலால் எல்லையைக் கடந்த ஆத்திரமடைந்த அமலாவும், விஜயாவும் சேர்ந்து அவரைத் திருப்பித் தாக்கி கீழே தள்ளியுள்ளனர். பின்னர், வீட்டில் இருந்த கணமான அம்மிக்கல்லை எடுத்து தினகரனின் தலையில் போட்டுள்ளனர். இதில் தலை நசுங்கி, ரத்த வெள்ளத்தில் மிதந்த தினகரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
கொலை நடந்த இரவு 11 மணி முதல் விடிய விடிய இந்த விவகாரத்தை மறைத்த மாமியார் விஜயா, மறுநாள் காலை 7 மணியளவில் தானே 100 என்ற காவல் உதவி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிமங்கலம் போலீசார், தினகரனின் உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்ட மனைவி அமலா மற்றும் மாமியார் விஜயா ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
