LATEST NEWS
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை வச்சு இப்படியா பண்றது…? “தாய், மகளின் படங்களை ஆபாசமாக மாற்றி…” போலி சாமியாரின் லீலைகள்… உறைய வைக்கும் பின்னணி…!!
குஜராத் மாநிலத்தில் சமூக ஊடகங்கள் வழியாக இளம்பெண் ஒருவருக்கு அறிமுகமான சுமித் சர்மா என்ற நபர், தன்னை ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் போல் காட்டிக்கொண்டு பழகியுள்ளார். ஆரம்பத்தில் ஆன்மீகம், தியானம் எனப் பேசி அப்பெண்ணின் நம்பிக்கையைப் பெற்ற அவர், நாளடைவில் தனது காதலை வெளிப்படுத்தி நெருக்கமாக பழக வற்புறுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக சுமித்தின் தொடர்பைத் துண்டித்துவிட்டு அவரை அனைத்து சமூக வலைத்தளங்களிலும் முடக்கினார். இதனால் ஆத்திரமடைந்த சுமித், அந்தப் பெண்ணைப் பழிவாங்க எண்ணி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அப்பெண் மற்றும் அவரது தாயாரின் புகைப்படங்களைத் திருடியுள்ளார்.
அதன்பின், நவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்தப் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து இணையத்தில் உலவவிட்டுள்ளார். இதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரிலேயே முகநூல், எக்ஸ் தளம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் 10 போலி கணக்குகளைத் தொடங்கி இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால் நிலைகுலைந்த பெண்ணின் குடும்பத்தினர் அகமதாபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்த போலீஸார், டெல்லியில் பதுங்கியிருந்து மற்றொரு பெண்ணை ஏமாற்றத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சுமித் சர்மாவைக் கைகுலுக்கித் கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பெண்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
