6 மாதம் அமைதியா இருப்போம்னு சொல்லிட்டு 6 நாள்கூட தாங்கல…அதிகாரம் பண்றவங்க மட்டும்தான் கோட் சூட் போடணுமா…திமுக-வின் சதி வேலைகளை மேடையிலேயே கிழித்துத் தொங்கவிட்ட விஜய்…!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

6 மாதம் அமைதியா இருப்போம்னு சொல்லிட்டு 6 நாள்கூட தாங்கல…அதிகாரம் பண்றவங்க மட்டும்தான் கோட் சூட் போடணுமா…திமுக-வின் சதி வேலைகளை மேடையிலேயே கிழித்துத் தொங்கவிட்ட விஜய்…!”

Published

on

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய், தான் ‘சூட்-கோட்’ அணிந்து வருவதை விமர்சிப்பவர்களுக்கு முதன்முறையாக நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். “நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சூட்-கோட் போட்டு வருவதைப் பார்த்துப் பல பேர் விமர்சனம் செய்கிறார்கள். ஏன்? நாங்க எல்லாம் சூட்-கோட் போடக்கூடாதா? அதிகாரம் செய்பவர்களும், ஆதிக்கம் செலுத்துபவர்களும் மட்டும்தான் அதை அணிய வேண்டுமா? அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது” என்று அவர் மேடையில் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், தான் வண்ணமயமாக ஆடைகளை உடுத்தாமல், அனைவரின் மனசைப் போல ‘பிளாக் அண்ட் ஒயிட்’ (கருப்பு-வெள்ளை) என்ற இரு நிறங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பதன் பின்னணியில் உள்ள காரணத்தையும் அவர் விளக்கியதோடு, “அனைத்து விஷயங்களிலும் இந்த விஜய் பிளாக் அண்ட் ஒயிட்டாக, நேர்மையாக இருப்பான் என்பதைக் காட்டவே இந்த உடை; இதில் கருப்பு நிறம் யாரைக் குறிக்கும் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்” என அரசியல் சூசகமாகப் பேசினார்.

தொடர்ந்து தனது மேடைப் பேச்சு குறித்துப் பேசிய முதல்வர் விஜய், தான் எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டு ‘நச நச’வெனப் பேசும் நபர் இல்லை என்றும், எந்த மேடையிலும் அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்குள் மட்டுமே சுருக்கமாகப் பேசி முடிப்பவன் என்றும் குறிப்பிட்டார். “இப்போது மக்கள் என்னிடம் என்ன சொல்கிறார்கள் என்றால், ‘விஜய், நீ எங்களுக்காக உழைக்க வந்திருக்க, நீ அந்த வேலையை மட்டும் பாரு; உன்னைப்பற்றிப் பேசுபவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என தைரியம் கொடுக்கிறார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற விஜய், பின்னர் விதிகளின்படி திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், தொகுதி மக்களுக்கு நன்றி கூற திருச்சிக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசிய முதல்வர் விஜய், தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என ஆளுங்கட்சியினர் பல சதிகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டினார். “புதிய அரசு அமைந்ததும் 6 மாதம் அமைதியாக இருப்போம் என்று எதிர்க்கட்சியினர் கூறினார்கள்; ஆனால், அவர்களால் 6 நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. நான் ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த அரை மணி நேரத்திலேயே தங்களுக்கு எதிரான அரசியலை ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது கல்யாண வீட்டுக்குச் சென்றால் கூட அங்கே தவெக ஆட்சியைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்” எனத் திருச்சியில் முதல்வர் விஜய் அதிரடியாகப் பேசியுள்ளார். முதல்வரின் இந்த அனல் பறக்கும் பேச்சு தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in