LATEST NEWS
38-ல் 13 மாவட்டங்களுக்கு வந்த புது மாற்றம்…முக்கியமான ‘அந்த’ துறை பெண்ணுக்கு தான்…அமைச்சர் முதல் கலெக்டர் வரை… முதல்வர் விஜய்யின் மாஸ் பிளான்…!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளையும் தோற்கடித்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் பரவலான விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. புதிய ஆட்சி அமைந்தவுடன் வழக்கமாக நடக்கும் அதிகாரிகள் இடமாற்றத்தில், தவெக அரசு தனித்துவமாகச் செயல்பட்டு வருவதாகப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பொதுவாகத் திராவிடக் கட்சிகள் தங்களுக்கு விசுவாசமான அதிகாரிகளை மட்டுமே முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கும் என்ற விமர்சனம் உள்ள நிலையில், தவெக அரசு திறமையின் அடிப்படையில் அதிகாரிகளை நியமித்து வருவதாகத் திரைத்துறையினர் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 13 மாவட்டங்களுக்குப் பெண் கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு, நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள் தற்பொழுது திறம்படப் பணியாற்றி வருகின்றனர். இதில் கடந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட சில அதிகாரிகளும் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது ஒட்டுமொத்தமாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவதால், வரும் நாட்களில் மேலும் சில மாவட்டங்களுக்கும் பெண் கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தலைமைச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சிக் காலத்திலும் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில் பெண் அதிகாரிகளுக்குப் பாராட்டுகளும் முக்கியத்துவமும் வழங்கப்பட்ட நிலையில், தவெக அரசும் அதே பாணியைப் பின்பற்றி வருகிறது. தவெக சார்பில் வெற்றி பெற்ற 13 சட்டமன்ற உறுப்பினர்களில் 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த தொழில்துறை ஒரு பெண் அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தவெக அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகள் பெண் அதிகாரிகளிடையேயும், மகளிர் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவமும் பாதுகாப்பும் வழங்கி முதலமைச்சர் விஜய் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைக்க வேண்டும் என்று அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
