LATEST NEWS
“கள்ளக்காதலனுடன் தனிக்குடித்தனம்….” பெண்ணை ஓட ஓட விரட்டித் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற 2-வது கணவர்… உறைய வைக்கும் பகீர் பின்னணி…!!
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தட்டாங்குளம் பாண்டியன் நகர் பகுதியில், முட்புதர் ஒன்றிற்குள் காளீஸ்வரி (34) என்ற பெண் பலத்த காயங்களுடன் பிணமாகக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பழனி காவல்துறையினர், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் காளீஸ்வரியின் இரண்டாவது கணவரான மகுடீஸ்வரன் நடமாட்டம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பாலசமுத்திர பகுதியில் தலைமறைவாக இருந்த அவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவரே தனது மனைவியைக் கல்லைப்போட்டு நசுக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொல்லப்பட்ட காளீஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவரைப் பிரிந்த நிலையில், மகுடீஸ்வரனை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டு பழனியில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, காளீஸ்வரிக்கு குரு என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கணவன்-மனைவி இடையே தொடர் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் மகுடீஸ்வரனைப் பிரிந்து குருவுடன் பாண்டியன் நகரில் அவர் தனியாக வாழத் தொடங்கினார். இதனால் ஆத்திரத்தில் இருந்த மகுடீஸ்வரன், நேற்று முன்தினம் இரவு காளீஸ்வரியின் வீட்டிற்குச் சென்று அவரைத் தனியாக முட்புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று கள்ளத்தொடர்பு குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து காளீஸ்வரியின் தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
