“இனி ‘தாமரை’ இல்லை…”பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக அண்ணாமலை அவுட்…பாஜகவிற்கு அண்ணாமலை கொடுத்த மரண அடி! இன்று மதியம் 12 மணிக்கு நடக்கப்போகும் அதிரடி என்ன?… – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனி ‘தாமரை’ இல்லை…”பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக அண்ணாமலை அவுட்…பாஜகவிற்கு அண்ணாமலை கொடுத்த மரண அடி! இன்று மதியம் 12 மணிக்கு நடக்கப்போகும் அதிரடி என்ன?…

Published

on

தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு, அந்தப் பொறுப்பு நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்பட்டது முதலே அண்ணாமலை கடுமையான அதிருப்தியில் இருந்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் பிரச்சாரத்தில் மட்டுமே ஈடுபட்ட அவர், சமீபத்தில் டெல்லி சென்று அமித் ஷா மற்றும் பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைச் சந்தித்து தனது ராஜினாமா முடிவை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையைச் சமாதானப்படுத்தும் முயற்சியாக, ஆந்திராவில் காலியாக உள்ள 4 ராஜ்யசபா இடங்களில் ஒன்றை அவருக்கு வழங்க பாஜக மேலிடம் திட்டமிட்டிருந்தது. இதற்காக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசி ஒரு இடத்தை பாஜக கேட்டுப் பெற்றதாகவும் கூறப்பட்டது. ஆனால், பாஜாகவின் இந்த சமாதானப் பரிசை ஏற்க அண்ணாமலை மறுத்துவிட்டதால், அவருக்காக ஒதுக்கப்பட்ட அந்த ராஜ்யசபா இடம் தற்போது மீண்டும் தெலுங்கு தேசம் கட்சிக்கே விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஆந்திராவில் உள்ள 4 இடங்களில் மூன்றில் தெலுங்கு தேசமும், ஒன்றில் ஜனசேனாவும் போட்டியிட உள்ளதால், அங்கு பாஜக போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement

தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து அண்ணாமலை இன்று மதியம் 12 மணிக்கு சமூக வலைதள நேரலையின் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். இந்த உரையின் போது, பாஜகவில் இருந்து தான் விலகுவதை முறைப்படி அறிவிப்பதுடன், புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்குவது குறித்த முக்கிய பிரகடனத்தையும் அவர் வெளியிட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த அதிரடி மாற்றம் தமிழக மற்றும் தேசிய அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in