இரக்கப்பட்டு லிப்ட் கொடுத்த தாத்தா…! “இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்து…” எச்.இ.வி தோற்றால் பாதித்து தொடர் சிகிச்சை… ஒரே நாளில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இரக்கப்பட்டு லிப்ட் கொடுத்த தாத்தா…! “இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்து…” எச்.இ.வி தோற்றால் பாதித்து தொடர் சிகிச்சை… ஒரே நாளில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

Published

on

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழியில் நின்றிருந்த இளம்பெண் ஒருவருக்கு காலில் வலியென்று சொன்னதால் இரக்கப்பட்டுத் தனது வண்டியில் லிப்ட் கொடுத்துள்ளார். அந்தப் பெண் ஆசை வார்த்தைகளைக் கூறி முதியவரைத் தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று, அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது விவசாயிக்குத் தெரியாமல் அங்குப் பொருத்தப்பட்டிருந்த இரகசியக் கேமரா மூலம் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறிது நேரத்தில் அங்கு வந்த பெண்ணின் கூட்டாளிகள், அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி 7 லட்சம் ரூபாய் பணம் கேட்டுப் பறிக்க முயன்றுள்ளனர்; இதனால் பயந்துபோன முதியவர் முதற்கட்டமாக 5,000 ரூபாய் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்திற்காகத் தனது விளைநிலத்தை விற்கத் துணிந்துள்ளார். ஒருகட்டத்தில் மிரட்டல் தாங்க முடியாமல் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisement

விவசாயியின் புகாரை அடுத்துப் போலீசார் அந்தப் பெண் உட்பட மோசடிக் கும்பலை அதிரடியாகக் கைது செய்தனர். சிறையில் அடைப்பதற்கு முன்னதாக அந்தப் பெண்ணுக்கு நடத்தப்பட்ட வழக்கமான மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு ‘எச்.ஐ.வி’ (HIV) பாதிப்பு இருப்பதும், கடந்த மூன்று வருடங்களாக அவர் இதற்காகச் சிகிச்சை பெற்று வருவதும் அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினியைச் சோதித்தபோது, அதில் பல ஆண்களுடன் அந்தப் பெண் இருக்கும் ஆபாசக் காட்சிகள் இருந்தன. இதன் மூலம் அந்தப் பெண்களோடு தொடர்புடைய பல ஆண்களுக்கும் அந்தப் பயங்கரத் தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால், வீடியோவில் உள்ள நபர்களைத் தேடிக் கண்டுபிடித்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் தீவிர முயற்சியில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in