“அட்லீ படம் எடுப்பது போல….” முதலமைச்சர் விஜய்யை வம்புக்கு இழுத்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர்…. சட்டமன்றத்தில் அட்லீ- சட்னி என வெடித்த விவாதம்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அட்லீ படம் எடுப்பது போல….” முதலமைச்சர் விஜய்யை வம்புக்கு இழுத்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர்…. சட்டமன்றத்தில் அட்லீ- சட்னி என வெடித்த விவாதம்….!!

Published

on

தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான சிவசங்கர், தமிழக முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துப் பேசினார். திரைப்பட இயக்குநர் அட்லீ பழைய படங்களின் காட்சிகளை வெட்டி ஒட்டிப் படம் எடுப்பது போல, தற்போதைய ஆளுநர் உரையும் திமுக அரசின் பழைய திட்டங்களின் வார்த்தைகளை மாற்றித் தயாரிக்கப்பட்ட ஒரு தொகுப்பாகவே உள்ளது எனக் குற்றம்சாட்டினார். மேலும், இந்த உரை தவெக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உள்ள இணக்கமான போக்கைக் காட்டுவதாகவும், எந்த வாக்காளர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தார்களோ அவர்களே இன்று போராடி வருவதாகவும் சிவசங்கர் சாடினார்.

இதற்குப் பதிலடி கொடுத்துப் பேசிய தவெக அமைச்சர் ராஜ்மோகன், முதலமைச்சர் விஜய் தற்போது திரைத்துறையை விட்டு முழுமையாக மக்கள் பணிக்கு வந்துவிட்டதால் தேவையற்ற வார்த்தை விளையாட்டுகளைத் தவிர்த்து அவையில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், ஒரு முழுநேர அரசியல்வாதியான சிவசங்கர் அட்லீயைப் பற்றிப் பேசுவது வியப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டதற்கு, தாம் அட்லீயைப் பற்றியும் பேசுவேன், சட்னியைப் பற்றியும் பேசுவேன் என சிவசங்கர் பதிலளித்தது அவையில் விவாதத்தை ஏற்படுத்தியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in