திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்களே, வருகிற ஜூலை 1ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வரப்போகுது – இந்த முக்கியமான விஷயத்தை மறந்துடாதீங்க, அப்புறம் உங்க மொபைல் போன் உங்களுக்கு கிடைக்காது… – cinefeeds
Connect with us

LifeStyle

திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்களே, வருகிற ஜூலை 1ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வரப்போகுது – இந்த முக்கியமான விஷயத்தை மறந்துடாதீங்க, அப்புறம் உங்க மொபைல் போன் உங்களுக்கு கிடைக்காது…

Published

on

Tiruchendur Temple

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இது விளங்குகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவு வருகிற ஜூலை 1ம் தேதி முதல் தீவிரபடுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி வருகிற ஜூலை 1ம் தேதி முதல் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் பொது தரிசன வரிசை 100 ரூபாய் விரைவு தரிசன கட்டண வரிசை மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் முழுமையான பரிசோதனை செய்யப்பட்டு அதன்பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

Advertisement

 

எனவே பக்தர்கள் கோவிலுக்கு வரும்போது தங்களது செல்போன்களை தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது தங்களது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்து விட்டு சுவாமி தரிசனம் செய்ய வருகை தர வேண்டும். அல்லது பக்தர்கள் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஆங்காங்கே கோவில் நிர்வாகம் சார்பில் கைபேசி பாதுகாப்பு வைப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளது. அந்த வைப்பகங்களில் பக்தர்கள் தங்களை செல்போன்களை பாதுகாப்பாக வைத்து விட்டு திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வரலாம் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

 

கோவிலுக்குள் பரிசோதனையின் போது பக்தர்களிடம் செல்போன்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்து பாதுகாப்பு பெட்டகங்களில் வைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்னும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே ஐகோர்ட் உத்தரவின்படி கோவிலுக்குள் செல்போன் இன்றி தரிசனம் செய்வதை முழுமையாக நடைமுறைப்படுத்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement

ஏற்கனவே திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் அல்லது கோவில் பகுதிகளில் ட்ரோன் கேமரா பறக்க விடவும் செல்போன் அல்லது வீடியோ கேமரா மூலம் ரீல்ஸ் எடுப்பதற்கும் திரைப்பட பாடல்களை பாடி நடனமாடுதல் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்தல் போன்ற செயல்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவை மீறி கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுப்பவர்களின் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவும் செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in