LATEST NEWS
அந்தரத்தில் பறந்து வெடித்து சிதறிய கார்… மொஹரம் ஊர்வலத்தில் அரங்கேறிய பகீர் ஸ்டண்ட்… லைக்ஸ், வியூஸ்களுக்காக இப்படியா செய்வது…? களத்தில் இறங்கிய போலீஸ்….!!
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தின் போது, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அராஜகமான ஸ்டண்ட் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு கிரேன் மூலம் கார் ஒன்றை தரையிலிருந்து சுமார் 40 அடி உயரத்திற்கு அந்தரத்தில் தொங்கவிட்டு, அதனைப் பயங்கரமாக வெடிக்கச் செய்துள்ளனர்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி மிக வேகமாகப் பரவியதை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக இது குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கினர். காருக்குள் பட்டாசுகளை நிரப்பி, அதிலிருந்து வெளியேறிய வாயுக்கள் மூலம் இந்தச் செயற்கையான வெடிப்பு விபரீதமாக நடத்தப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் மூலம் தங்களுக்குப் புகழைத் தேடிக்கொள்ளவும், அப்பகுதியில் உள்ள இரண்டு உள்ளூர் குழுக்களுக்கு இடையே நிலவும் போட்டியில் தங்களின் கெத்தைக் காட்டவுமே இந்த ஆபத்தான காரியம் அரங்கேற்றப்பட்டுள்ளது. காருக்குள் வைக்கப்பட்ட ராக்கெட் போன்ற பட்டாசுகள் வெடித்ததில் ஏற்பட்ட அழுத்தத்தால் காரின் ஜன்னல் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து சிதறி, பார்ப்பதற்குப் பெரிய குண்டு வெடிப்பு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்த விபரீதச் செயலில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் நான்கு பேரைக் கண்டறிந்த காவல்துறையினர், அவர்கள் மீது தற்போது வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
