LATEST NEWS
வெறும் ஊறுகாய் பாட்டிலுக்காக இப்படியா…? தோழியின் கழுத்தை நெரித்துக் கத்தியால் குத்திய 9-அம வகுப்பு மாணவி… ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுமி… விடுதியில் நடந்த பகீர் சம்பவம்…!!!
குஜராத் மாநிலம் தாபி மாவட்டத்தில் உள்ள அம்பாக் கிராம ஆசிரமப் பள்ளியில் தங்கிப் படிக்கும் 15 வயதுடைய இரண்டு மாணவிகளுக்கு இடையே இரவு உணவு அருந்தும் போது ஒரு சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு மாணவி உணவு வாங்கச் சென்றபோது, மற்றொரு மாணவி தனக்கு ஊறுகாய் பாட்டிலை எடுத்து வருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு அந்தத் தோழி மறுப்புத் தெரிவிக்கவே, இதனால் ஆத்திரமடைந்த மாணவி உணவக மேஜையில் இருந்த கத்தியை யாருக்கும் தெரியாமல் மறைத்து எடுத்துக்கொண்டு, சாப்பிட்டு முடித்துக் கைகழுவச் சென்ற மாணவியைப் பின்தொடர்ந்து குளியலறைக்குச் சென்றுள்ளார். அங்கு வைத்துத் தனது தோழியின் கழுத்தை நெரிக்க முயன்றதோடு, கத்தியால் அவரது கை மற்றும் உடலின் பல பகுதிகளில் கொடூரமாகக் குத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பள்ளி ஊழியர்கள், ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு சூரத் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த அதிர்ச்சிச் சம்பவம் குறித்துப் பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், வலோட் பகுதி காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்திய மாணவியைக் கைது செய்தனர்.
பின்னர் அவர் வதோதராவில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குக் கொண்டு செல்லப்பட்டார். வெறும் பத்து நாட்களுக்கு முன்புதான் இருவரும் இந்த விடுதியில் சேர்ந்துள்ள நிலையில், எவ்வித முன்விரோதமும் இன்றி ஊறுகாய் தராததற்காக இந்த வன்முறை நடந்துள்ளது பள்ளி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
